Thursday, January 28, 2010

உணர்வாயா நீ…!

குமுறி எழும் கண்ணீரை
கைக்குட்டைக்குள் புதைத்தபடி

ஒரு முறை அல்ல
ஓராயிரம் முறை
அடித்தடித்து சொல்லியாயிற்று
நான் உன்னை நேசிப்பதாய்.

என் இதயத்தை பிளந்து பிளந்து
எத்தனை தடவை காட்டியுமாயிற்று
உன் மீது நான் கொண்ட நேசத்தை
இதை புரிவாயா நீ….!

இந்த உலகில்
உனக்கு யாரைப் பிடிக்கும் என்று
என்னை யாரும் கேட்டால்…

என் விழிகள் இரண்டும்
உன்னை நோக்கி
கணைகளை வீசும்.

என் சுண்டு விரல் கூட
உன்னை நோக்கி நீண்டு
உன்னையே சுட்டிக் காட்டும்.

எப்போதாவது
என் நேசத்தை
புரிந்து கொண்டாயா நீ….?

உனக்கெங்கே
இந்த ஏழையின்
நேசமும், பாசமும்
புரியப் போகின்றது…?

விடியலுக்கு முந்திய
அந்த இருட்டினிலே
விழி நிறைந்த கனவுகளுடன்
நாம் சிரித்து மகிழ்ந்திருந்த
அந்தக் கணப் பொழுதுகள்
இன்னும் என் உயிரோடு ஒட்டி
உணர்வோடு ஊசலாடிக் கொண்டே இருக்கிறது.

உனக்குள் நான் தொலைந்திருக்கிறேன்
இனியாவது தேடிக் கொள்வாயா…?

உன் நினைவில் நான்
கரைந்து போனது மட்டுமல்ல
உறைந்தே போயிருக்கின்றேன்
இதை உணர்வாயா நீ…?

1 comment:

  1. Hi sujitha
    நல்ல வரிகள்..,
    ஒவ்வொரு வரியிலும் உணர்ந்த வலிகள்..,
    உங்கள் நண்பன் காதலித்தாரா என்பது மறுபுறம்
    ஆனால் காதல் உங்கள் நண்பனை ஆசிர்வத்திருக்கிறது.
    கவி வானில் சிறகடிக்க காதல் ஒரு எழிய வழி
    வாழ்த்துக்கள்..
    கூறுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்
    விஸ்வநாதனின் மறுபக்கம்

    ReplyDelete